மகிந்த பட ரீ-சேட் வழங்கப்பட்டு 450 பஸ்களில் கொண்டுவரப்பட்ட மக்கள்(காணொளி)
மக்களும் வெயிலில் காய்ந்து கருவாடாகிப் போய் யாழ் துரையப்பா மைதானத்தில் கூடியுள்ளனர்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற  பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் மகிந்தவின் பரப்புரைக்கு வந்தால் சமுர்த்தி கொடுப்பனவு என்றவுடன் கைக்குழந்தைகளுடன் சமுர்த்திப் பயனாளிகளும் பொது மக்களும் கைக் குழந்தைகளுடன் வெயில் காய்ந்து கருவாடாகிப் போய் கூட்ட்த்தில் கலந்து கொண்டுள்ளனர். 
இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் கலந்துக்கொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு 450 இ.போ.ச பேரூந்துக்கள் மூலம் மக்கள் இக்கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.பேருந்துகளில் பெயர் பலகைகளுக்கு பதிலாக கிராம சேவகர் பிரிவுகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் சமூர்த்தி அங்கத்தவர்களுக்கு ரூபாய் 5000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கூறி மக்களை அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
 

.jpg)


 
 
 
 
 
 











