சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிக்கு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சியின் தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க முன்னாள் ஜனாலதிபதி மஹிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்திக்க உள்ளனர்.இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைää கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பதவிகளை மஹிந்த ராஜபக்ச விட்டுக்கொடுக்க தீர்மானித்துள்ளார்.கட்சி இரண்டாக பிளவடைவதனைத் தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மஹிந்த ராஜபக்ச தீர்மானம் எடுத்துள்ளார்.
கட்சியின் ஆலோசகராக தொடர்ந்தும் கடமையாற்றப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.பிரதேச சபைகள் உள்ளுராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.








