கே.பி, கருணா மீது நடவடிக்கை சரத் பொன்சேகா
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாபன் என்ற கே.பி மற்றும் கருணா ஆகியோர் மீது விசாரணை நடத்தப்படும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள பேட்டியில், கே.பி மற்றும் கருணா இருவரும் முக்கிய தீவிரவாதிகள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கே.பி. மூலமாக விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான டன் கணக்கிலான தங்கம் மற்றும் பெருமளவு பணம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் முந்தைய ராஜபக்சே அரசு, கே.பி. மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து கே.பி., கருணா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.








