Breaking News

இனப்படுகொலை தீர்மானம் குறித்து தீவிரமாக ஆராயும் வெளிநாட்டு தூதரகங்கள்

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் தொடர்பாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிட்ட அறிக்கையின் விபரங்களை அமெரிக்க, பிரிட்டன் மற்றும் கனேடிய தூதரகங்கள் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பாக தமிழ் புத்திஜீவிகளின் கருத்தை அறிந்து வருவதாகவும் தூதரக வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை பிரேரணை அரசங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கொழும்பில் உள்ள தூதரகங்களுக்கு தகவல் அனுப்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.