Breaking News

இந்தியா- ஓசூர் அருகே புகையிரதம் தடம் புரண்டதில் 8 பேர் பலி பலர் காயம்

ஓசூர் அருகே பெங்களூர் – எர்ணாகுளம் இடையே செல்லும் கடுகதி பயணிகள் புகையிரதம் இன்று காலை 7.40 மணியளவில் தடம் புரண்டதில் 8 பேர் பலியாகினர்.

மேலும், 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற கடுகதி புகையிரதம் ஓசூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்த அந்த ரயில் ஆனைக்கல் பகுதியினை கடக்கும் போது திடீரென்று எஞ்சின் உட்பட நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் இரண்டு பொதுப் பெட்டிகளும், 2 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் அடங்குகின்றன.