Breaking News

கேட்டாபயவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

காலியில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப ஆயுதக் களஞ்சியசாலை ஆகியவை தொடர்பில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இரகசியப் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 

இது தொடர்பில் இன்று பிற்பகல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம், ஆரம்பத் தகவல்களை பெற்றுக் கொண்டதாகவும், குறித்த புள்ளி விபரங்களைப் பார்த்து முழுமையான தகவல்களை வழங்குவதாக அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.