மகிந்த என்னை அவமானப்படுத்தினார் - ஜனாதிபதி குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிலோன் டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினார். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிகரெட் பக்கட்டுகளில் எச்சரிக்கை புகைப்படங்கள் பதிக்கப்பட வேண்டும் என தான் தெரிவித்ததை நியாயப்படுத்துமாறு சிலோன் டொபாகோ நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி தனக்கு உத்தரவிட்டார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட நிறுவனம் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.முன்னாள் ஜனாதிபதியின் இச்செயற்பாடு நியாயமற்றது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு, சுகாதார அமைச்சு அதிகாரிகளே அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.








