தாமரைத் தடாக வீதி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையானது (காணொளி இணைப்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.ஆனந்த குமாரசுவாமி மாவத்தை என பெயரிடப்பட்டிருந்த கொழும்பு 7, ஹோர்டன் சுற்றுவட்டம் மற்றும் பொதுநூலக சுற்றுவட்டம் என்பவற்றுக்கு இடையிலான பகுதி 2011ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி தாமரைத்தடாக வீதியென பெயர்மாற்றப்பட்டது.எனினும், நேற்று மீண்டும் அந்த வீதியின் பெயர் ஆனந்த குமாரசுவாமி வீதியென மாற்றப்பட்டது.