புதிய அரசாங்கத்தின் சிலருக்கு மஹிந்த பீதி ஏற்பட்டுள்ளது - உதய கம்மன்பில
புதிய அரசாங்கத்தின் சிலருக்கு மஹிந்த பீதி ஏற்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் ஒரு சில அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைக் கண்டு அஞ்சுகின்றனர்.எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் தோல்வியைத் தழுவும்.
இதனை புரிந்து கொண்டவர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக சேறு பூசும் அதேவேளை, சிறையில் அடைக்கப் போவகதாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.மஹிந்த ராஜபக்ச ஓர் சிங்கம், சிங்கங்கள் அழுத்தங்கள் எச்சரிக்கைகளுக்கு அடி பணியப் போவதில்லை.
அழுத்தங்கள் எச்சரிக்கைகளின் மூலம் சிங்கங்களின் பலம் மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.புதிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் மஹிந்தவை கைது செய்ய வேண்டுமென விடுத்த கோரிக்கை தொடர்பில் சிங்களப் பத்திரிகையொன்று அவர் இந்த பதிலைத் தெரிவித்துள்ளார்.