Breaking News

காணாமல் போனோர் ஆணைக்குழு திருகோணமலையில் கூடுகிறது

காலநீடிப்பை அடுத்து காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு தமது அடுத்த அமர்வை திருகோணமலையில் நடத்தவுள்ளது.

இதன்படி பெப்ரவரி 28 மற்றும் மார்ச் முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் திகதிகளில் இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன.நாளை 15ம் திகதி வரையிலேயே ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் வரையறுக்கப்பட்டிருந்தது.இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை எதிர்வரும் 6 மாதங்களுக்கு நீடித்தார்.