இலங்கை அரசிற்கு தலையிடி ஆரம்பம்
வட மாகாணசபையால் பிரகடனப்படுத்தப்பட்ட இனவழிப்பு பிரரேணை தற்போது சிறீலங்கா அரசிற்கு தலையிடியை உண்டு பண்ணியிருக்கின்றது.. இனவழிப்புச் செயன்முறை மீதான பிரரேணையை ஸ்ரீலங்கா அரசு முற்றுமுழுதாக மறுத்திருக்கின்றது என தொிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தின் போது மனித இழப்புக்கள் இடம்பெற்றன என்றும் அதற்கு காரணம் தமிழீழ விடுதலைப்புலிகளே சாதாரண மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தியமையே இழப்புக்குக் காரணமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக வெளியிடப்படவுள்ள அறிக்கையை தாமதப்படுத்துமாறு சிறீலங்கா அரசு கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இது தொடா்பில் இந்தியா மௌனம் காத்து வருகின்ற அதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர்ந்துள்ள உறவுகள் அறிக்கை சமர்பித்தலை வலியுறுத்திவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
வட மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் பேச்சு நடத்த வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தொிவித்துள்ளாா்.
இந்நிலையில் வடமாகாணசபையின் பிரேரணையை தமிழகம் ஆதரிப்பதாகவும் இந்தியா ஜெனிவாவில் அழுத்தங்களை ஏற்படுத்துமாறும் சிறீலங்கா ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் பிரேரணை குறித்து அழுத்தத்தை பிரயோகிக்குமாறு கோரி நிற்பதாக இந்திய வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு வேல் முருகன் மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழநெடுமாறன் ஆகியோா் தொிவித்துள்ளனா்.







