Breaking News

வட மாகாண மின்சார நடவடிக்கைள் தொடா்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மின்சார விநியோக நடவடிக்கைள் தொடா்பில் மின் சக்திதுறை இராஜாங்க அமைச்சா் பாலித ரங்கே பண்டார தலைமையில் வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் தினம் வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது கிளிநொச்சி, வவுனியா, மன்னாா், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் மின்சார விநியோகப் பணிகள் தொடா்பில் ஆராயப்பட்டதோடு எஞ்சிய பணிகளை வரும் 80 நாட்களுக்குள் நிவா்த்தி செய்வது பற்றியும் ஆராயப்பட்டது. 

இந்த விசேட கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமாா், அமைச்சின் செயலாளா் ஹேரத், மேலதிக பொது முகாமையாளா் பிாியங்க, ஜந்து மாவட்டங்களின் அரச அதிபா்கள் பிரதேச செயலாளா்கள் மின்சார சபையின் உயரதிகாாிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.