நைஜீரியாவில் குண்டுவெடிப்பு! 50 பேர் பலி
36 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக நைஜீரிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் கடந்த 6 ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பொது மக்கள் அதிகமாகவுள்ள இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த அதேவேளை, பாகா என்ற இடத்திலுள்ள மீன் சந்தைக்குள் இனந்தெரியாத நபரொருவரினால் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மாநில பாதுகாப்பு துறை அலுவலகம் அருகிலுள்ள பேரூந்து நிலையத்தில் கார் குண்டு ஒன்று வெடித்துள்ளது.இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு போகோஹராம் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.