இராணுவ வழக்கிலிருந்து தப்பினார் பொன்சேகா!
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை 2010 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்ததாக அவரது செயலாளர் செனக டி சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வல்கம இந்த விடுதலை தீர்ப்பை அறிவித்துள்ளார். இந்த வழக்கில் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக 41 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 12 வீரர்களை ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.