மீனவர் பிரச்சினையில் நேரடியாக கவனம் செலுத்துகிறாராம் மோடி
தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழ் மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி நேரடியாக கவனம் செலுத்தி வருவதாக, இந்திய மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி மோடி இலங்கை ஜனாதிபதியிடமும் இலங்கைப் பாராளுமன்றத்திலும் தெளிவாக பேசி இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ள இராதாகிருஸ்ணன், நிச்சயமாக விரைவில் சுமூகமான தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.