Breaking News

கோத்தாபயவை கைது செய்ய ஆலோசனை!

எவன்காட் நிறுவன சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இது தொடர்பில் நேற்று  கூடிய தேசிய நிறைவேற்று சபையில் பேசப்பட்டதாக சபையின் உறுப்பினர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவிக்கையில்,

´நிறைவேற்று சபை கூட்டத்தில் எவன்காட் நிறுவனம் குறித்து பேசப்பட்டது. அது மிகவும் கடுமையான அமைப்பு. சர்வதேச அளவில் பல செயற்பாடுகளை செய்து நிதி சேகரித்துள்ளது. ஆனால் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று சரியாகக் கூறப்படவில்லை. 

இவ்வாறான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியது எப்படி? எந்த அடிப்படையில் என்றும் இன்னும் தெளிவில்லை. இராணுவத்தினரை எடுத்து இவ்வாறானதொரு இராணுவ அமைப்பை ஏற்படுத்தி சர்வதேச தர செயற்பாடுகளை செய்தது எப்படி என்று தெளிவில்லை. இது குறித்து விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோத்தாபய  ராஜபக்ஷதான் இதில் குற்றவாளியாக இருப்பார். ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டால் கோட்டாபயவை கைது செய்ய வேண்டிவரும் என்பது குறித்து இங்கு பேசப்பட்டது´ என விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.