Breaking News

கோத்தபாயவுக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றத்தால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 'எவண்ட் கார்ட்' விவகாரம் தொடர்பிலேயே இத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி எஸ். திசாநாயக்க மற்றும் மேலும் இருவருக்கும் இதன்போது நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.