இலங்கை பெண் ஊடகவியலாளர்களுக்கு அதிகளவில் பாலியல் தொல்லை!
இலங்கையில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்களில் 29 சதவீதமானோர் பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள ஆய்வொன்றை அடிப்படையாக வைத்தே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவ் ஆய்வை நடத்தியுள்ள தில்ருக்ஷி ஹந்துனெத்தி , 45 பெண் ஊடகவியலாளர்களிடம் இது தொடர்பில் தகவல்களை சேகரித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் (28.8%) தாம் பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுத் துள்ளமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எனினும் இவ் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் , பல்வேறு காரணங்களுக்காக முறைப்பாடுகள் மேற்கொள்ளப் படுவதில்லையெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய சம்பவங்களின் போது சக ஊழியர்களிடமிருந்து போதியளவு ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவதில்லையெனவும் , மேலும் முறைப்பாடுகள் நிறுவனத்தினால் அலட்சியம் செய்யப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.