Breaking News

யாழ் வந்த மோடி வடக்கு முதல்வரை சந்தித்தார்!

வடமாகாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வுகளை அடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும் ,தமிழர்களுக்கான தீர்வு யோசனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.