Breaking News

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் மோடி! (காணொளி இணைப்பு)


இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் வடக்கிற்கான தனது பயணத்தை ஆரம்பத்தார்.


 இன்று காலை  அநுராதபுரத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட அவர் , மன்னாருக்கான தனது பயணத்தையும் ஆரம்பத்தார். அங்கு சென்ற அவர் தலைமன்னாருக்கும் மடுவுக்கும் இடையிலான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி அவரது பயணம் அமைந்திருந்தது.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் 3மணிநேரம் தங்கியிருந்ததோடு பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.