இலங்கைக்குள் தமிழர்களுக்கு சம உரிமை வாழங்க வேண்டும் - கொழும்பில் மோடி (காணொளி இணைப்பு)
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, ஜனநாயகம் என்பவற்றைப் பெற்று வாழ வேண்டும். அதற்கு 13வது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை இந்தியா எதிர்பார்க்கிறது. என இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
.
இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை ஜனாதிபதிக்கு இடையில் இன்று காலை விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இலங்கைக்கு 28 வருடங்களின் பின்னர் விஜயம் செய்தமை எனக்கு பெருமையளிக்கிறது. இறுதியாக இந்திய பிரதமர் ஒருவர் அரசுமுறைப் பயணமாக 1987 ஆம் ஆண்டே இலங்கை வந்தார். இந்தக்கால இடைவெளிக்குப் பின்னர் நான் இங்கு வந்துள்ளேன்.
எனக்கு இலங்கை அளித்த வரவேற்பு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், இலங்கையில் பௌத்தம் வந்த நாளில் இருந்தே தொடர்புள்ளது. மீனவர்களின் பிரச்சினைக்கு இருத்தரப்பிலும் நிரந்தர சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும். அத்துடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் தமது உதவியை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.








