Breaking News

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து (காணொளி இணைப்பு)

இலங்கைக்கு இருநாள் பயணமாக வந்துள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை சந்தித்தார்.

 இந்தச்சந்திப்பின்போது ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்பு பேச்சுக்கள் அடம்பெற்றன, இந்த சந்திப்பில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

 1.இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம். 

2.சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம்.

 3.இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம். 

4.ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகியனவே கைச்சாத்திடப்பட்டன. 

இதேவேளை திருகோணமலையில் பெற்றோலிய உப மையத்தை அமைப்பதற்கான உதவிகளை செய்வதற்கு இந்தியா தயார் என இந்தியப் பிரதமர் நரேந்திர அறிவித்துள்ளார்.