வடக்கிற்கான மோடியின் விஜயம்! ஊடக சுதந்திரம் பறிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ் பொது நூலகத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டார்.இவ்விஜயத்தின் போது ஆங்கு செய்தி சேகரிப்பதற்காக நூலகத்திற்குள் சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் தனிப்பட்ட ஊடகவியலாளருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியிடம் வினவிய போது, யாழ் நூலகத்திற்குள் காணப்படும் இடப்பற்றாக்குறை காரணமாகவே ஊடகவியலாளர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.இந்திய பிரதமரின் இவ்விஜயத்தின் போது ஊடக சுதந்திரம் பறிபோனமையை குறித்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.