முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆப்பு வைத்தது சுதந்திரக் கட்சி!
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்கிய ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களில் 6 பேர் தமது ஆதரவினை மீள வாபாஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்கள் இன்று திங்கட்கிழமை தமது வாபஸ் கடிதத்தினை கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்காகவே ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய போதிலும் அமைச்சு பதவிகள் உள்ளிட்ட ஏனைய விடங்களுக்கு ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை.
இந்த நிலையிலேயே 6 உறுப்பினர்கள் முதற்கட்டதாக வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.இதற்கமைய வீரசிங்க, விமல வீர திஸாநாயக்க, உதுமாலெப்பை, அமீர் லெப்பை, ஜெயசேன, ஜயந்த விஜயசேகர ஆகியோரே தமது ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.