Breaking News

எங்களது உருவப்பொம்மையை மட்டும் ஏன் எரிக்கின்றீர்கள்! மாவை கேள்வி

யாழ்ப்பாணத்திலும் வெளிநாடுகளிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் உருவப் பொம்மைகள் எரிக்கப் பட்டமையை தமிழரசுக்கட்சி கண்டித்துள்ளது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த சம்பவங்களை கண்டித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எடுக்கின்ற தீர்மானங்களை புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் சிலரே தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர்கள் தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரிக்கிறது. இந்தநிலையில் அந்தக்கூட்டமைப்பின் பெயரை களங்கப்படுத்த சிலர் முனைவதாகவும் சேனாதிராஜா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சம்பந்தன், சுமந்திரன் உருவப்பொம்மைகளை எரிப்போர் ஏன் போர்க்குற்றங்களை புரிந்த மஹிந்த ராஜபக்சவினமும், கோத்தபாய ராஜபக்சவினதும் உருவப்பொம்மைகளை எரிக்கவில்லை என்று சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.