ரத்கம பிரதேச சபையின் தலைவர் சுட்டுக்கொலை
ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
காலி - ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் புஸ்பகுமார மென்டிஸ்ஸே இந்த சம்பவத்தில் பலியானதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ரத்கம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.








