Breaking News

இனப்பிரச்சினையை தீர்க்க மோடி வலியுத்த வேண்டும்!

இலங்கையின் இனப்பிரச்சினையை உடனடியாக தீர்க்க இலங்கை அரசாங்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று கனேடிய தமிழர் பேரவை  வலியுறுத்தியுள்ளது.

அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். தமிழ் மக்கள் தங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.