Breaking News

தமிழகத்திலுள்ள சகல அகதிகளையும் அழைத்துவர ஏற்பாடு

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமான வெளியேறி, தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ள சகல அகதிகளையும் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன், இவர்களை விரைவில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அகதிகளான இருந்தவர்களில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் சுமார் ஐயாயிரம் அகதிகள் நாட்டிற்கு கட்டம் கட்டமாக அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.