Breaking News

நான் உருவாக காரணம் பாலச்சந்தர்! கமலஹாசன் பேச்சு

பாலச்சந்தர் இல்லாவிட்டாலும் கூட ரஜினி முரட்டுக்காளை போன்றவேறு ஏதாவது ஒரு படத்தின் மூலம் நடிகனாகி இருப்பார்.

ஆனால் பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன். பாலச்சந்தர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றை இந்த மேடையில் ஒலி பரப்பினார்கள்.

அதை கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். எனக்கும் பாலச்சந்தருக்குமான பாசப்பிணைப்பு நெடுங்காலமாக தொடர்கிறது. எனது மகா குருவாக அவரை கருதுகிறேன். உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தர் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு கிடைத்த பெரிய பெருமை என்றார்.