புலிகளின் கோட்டைக்கு எதற்காக வருகிறார் மோடி!
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் வரவுள்ளார்.இதனால் தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும் என்று இந்தியாவின் ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மக்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்கிறார். வரும் 12-ஆம் திகதி மொரிசியசில் இருந்து இந்தியப் பிரதமர் கொழும்பைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நசீட் கைது செய்யப்பட்டுள்ளதால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் மாலைதீவுக்குச் செல்வாரா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக சவுத் புளொக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் கோட்டைக்கு இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ள பயணம், தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும். என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.தென்னிந்தியாவில் தனது பலத்தைப் பெருக்குவதற்கு பாஜக முயற்சித்து வருகிறது.” என்றும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.