Breaking News

மஹிந்தவுக்கு இனி அரசியலில் இடமில்லை! - ரில்வின் சில்வா

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சிப்பதாகவும், கடந்த ஜனவரி எட்டாம் திகதியே மக்கள் அவரை நிராகரித்து விட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 

எனவே மீண்டும் அரசியலில் ஈடுபட அவருக்கு தார்மீக உரிமைகள் இல்லை, மக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் எனவும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தற்போது அரசாங்கம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல் மற்றும் தேர்தல் முறையில் திருத்தம் செய்வது குறித்து பேசுவதாக குறிப்பிட்ட அவர், தினேஸ் குணவர்த்தனவின் தலைமையில் தேர்தல் முறைகளை திருத்த நியமிக்கப்பட்ட குழு என்னவானது எனவும் சுதந்திரக் கட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.