Breaking News

திரைப்பட விருதுகள் அறிவிப்பு! குற்றம் கடிதல் திரைப்படத்துக்கு தேசிய விருது

62ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி விருதுகள் விவரம் பின்வருமாறு - 

குற்றம் கடிதலுக்கு தேசிய விருது 

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது இயக்குநர் பிரம்மா இயக்கிய குற்றம் கடிதல் படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 நா.முத்துக்குமாருக்கு விருது 

சைவம் படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய அழகு... அழகு... பாடலுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த பாடகி உத்ரா உன்னி 

சிறந்த பாடகிக்கான விருதை அழகு... அழகு... பாடலை பாடிய உத்ரா உன்னிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த படத்தொகுப்பு 

ஜிகர்தண்டா ஜிகர்தண்டா படத்தில் விவேக் ஹர்சன் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை பெறுகிறார்.

 காக்கா முட்டைக்கு விருது 

சிறுவர்களுக்கான சிறந்த திரைப்படமாக தமிழில் வெளிவந்த காக்கா முட்டை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

தேசிய அளவில் சிறந்த திரைப்படம் கோட் 

தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக கோட் என்ற மராத்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த துணைநடிகர் பாபி சிம்ஹா

 சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது ஜிகர்தண்டா படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.