பீல்ட் மார்ஷலாக உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா!
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பீல்ட் மார்ஷல் தரத்துக்குப் பதவிஉயர்த்தப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை அரசாங்க பிரதிநிதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ள முதல் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவேயாவார்.