Breaking News

19ம் திருத்தச் சட்டம் குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது



19ம் திருத்தச் சட்டம் குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தி, சடத்தை நிறைவேற்றுவது குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பு இம்மாதம் 10ம் திகதி நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த திருத்தச் சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீண்ட கால போராட்டத்தின் பின்னரே 19ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிக்க மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்கள் இணைந்து செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களில் கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்ற போதிலும் பெரும்பாலும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் 19ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.