Breaking News

வடமாகாண சபை விசாணைக் குழுவிடம் 86 முறைப்பாடுகள் பதிவு

இனப்படுகொலையினை நடத்திய மகிந்த அரசாங்கம் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியுடன் இணைந்து வடமாகாணத்தில் கடந்த 5 வருடங்களாக மேற்கொண்ட முறையற்ற நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக வடமாகாண சபையின் விசாணைக்குழுவிடம் இதுவரை 86 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக விசாணைகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொள்ளவுள்ளார். இவ்வாறு வடமாகாண விசாணைக்குழுவின் தலைவரும், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

கைதடியில் அமைந்துள்ள வடமகாண சபையின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

வடமாகாண பொதுச் சேவை மற்றும் உள்ளுராசட்சி மன்றங்களில் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற முறையற்ற நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதிவி உயர்வு போன்வை தொடர்பாக விசாணை நடத்த வடமாகாண சபையில் இருந்து 7 அங்த்தவர்களைக் கொண்ட விசாணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாணைக்குழுவிடம் தற்போது முறையற்ற நியமனங்கள் தொடர்பாக 59 முறைப்பாடுகளும், முறையற்ற பதவி உயர்வுகள் தொடர்பாக 18 முறைப்பாடுகளும், முறையற்ற நியமனங்கள் தொடர்பாக 9 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்வுகளை விசாணைக்குழு மேற்கொண்டு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். அறிக்கையின்படி முறைப்பாடுகள் மீதான நடவடிக்கைகளை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொள்வார். என  தெரிவிக்கப்படுகின்றது.