இன்றைய நிலையிலிருந்து நாட்டை மீட்க வேண்டும்! மகிந்த அழைப்பு
“தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியமாகும்” என முன்னாள் ஜனாதிபதி மிகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். தனது ஆட்சியிலிருந்த அனைத்து அதிகாரிகளையும் அழைத்து விசாரிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாராஹென்பிட்டிய அபயராமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சமகால அரசியல் முறைமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் சட்டதரணிகள் கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அதன் போது அவர் முக்கியமாகக் கூறியதாவது:
“எனது ஆட்சி காலத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் அழைத்து விசாரணை செய்கின்றனர் மேலும் அவர்கள் ஊடக கண்காட்சிகளை நடத்தி மகிழ்ச்சியடைகின்றனர், அது மட்டுமன்றி 60 மற்றும் 70 வயதுடைய ஓய்வுப்பெற்ற அப்பாவிகளையும் அழைத்து விசாரணை செய்கின்றனர் அவர்கள் வெளியில் வரும் போது கண்களில் கண்ணீர் நிறைந்துள்ளது,
இது முறையான விடயமல்ல தற்போதைய நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது அவசியமாகும்” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷதெரிவித்தார்.








