Breaking News

வலி்.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளது

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள வலி.வடக்கில் இரண்டாம் கட்டமாக மேலும் ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் இன்று காலை 9 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலர்கள் பிரதேச சபை தலைவர்கள் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் முப்படைகளின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்புவலயத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வலி.வடக்கு பகுதியில் 613 ஏக்கர் மட்டுமே இருந்து விடுவிக்கப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளே முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் சில பகுதிகள் இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ளது இங்கு மீள்குடியேற்றம் செய்யவுள்ள மக்களுக்கான குடிநீர் வீட்டுத்திட்டம மீள்குடியேற்றச் செல்லும்மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்ப்பது தொடர்பாகவும் இன்று கலந்துரையாடலில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.