ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை-சந்திரிகா
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டு விட்டது என்று சிலர் கூறுகின்றனர். எம்முடைய கட்சி இரண்டாக பிளவுபடவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கம்பஹாவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து விட்டார். அவர் கௌரவமான முறையில் வெளியேறவேண்டும்.
நான் அவ்வாறே சென்றேன். எனினும் இவர்கள் இன்று மீண்டும் களத்தில் குதிக்க முயற்சிக்கின்றனர். ஐயோ, எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று கேட்கின்றார். இது என்ன வேலை, வேலைச்செய்வேண்டுமாயின் வந்து தலையை போட்டு வேலைச்செய்யவும் என்றும் அவர் கூறினார்.








