படகுகளை மீட்க இலங்கை வரும் குழு
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க 143 பேர் அடங்கிய தமிழக மீனவ பிரதிநிதிகள் குழு இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்லை மீறி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழக மினவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அவ்வாறு 2014-ம் ஆண்டு மீன்பிடி தடைகாலம் முதல் சிறைப்பிடிக்கப்பட்ட 86 படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன அரசு நல்லெண்ண அடிப்படையில் தமிழக படகுகள் அனைத்தையும் விடுவிக்க உத்தரவிட்டது. அதன்படி 34 படகுகள் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 52 படகுகளை மீட்க மீனவப் பிரதிநிதிகள் குழு இன்று காலை இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
143 பேர் 18 படகுகளில் புறப்பட்டுள்ளனர். இன்று மாலை இலங்கையை வந்தடையும் இவர்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு கொண்டு நாளை தமிழகம் திரும்புவர்.








