Breaking News

வட மாகாணத்தில் மணல் அகழ்வு தொடர்பில் ஆய்வு நடத்த தீர்மானம்

வட மாகாணத்தில் மணல் அகழ்வு தொடர்பில் சூழலியல் ஆய்வொன்றை முன்னெடுப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வினால் நிலக்கீழ் நீருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் இந்த ஆய்வில் கண்டறியவுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க கூறினார்.

வட மாகாணத்தில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்ட மணல் அகழ்வு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மணல் அகழ்வினால் நிலக்கீழ் நீருக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க மேலும் தெரிவித்தார்.