யாழ்.பல்கலையில் நடைபெறவிருந்த கலந்துரையாடலுக்கு துணைவேந்தர் தடை
யாழ்ப்பாண பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தடைவிதித்துள்ளார்.
பேராசிரியர் ராஜன் ஹுலின் புதிய நூலான பனை முறிகள்- ரஜனி முதல் போர் முடிவு வரை என்பது தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு துணைவேந்தர் அனுப்பியுள்ள கடிதத்தில், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக வளவுக்குள் அனுமதி தரமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் தமது நிகழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படமாட்டாது என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.