மைத்திரியுடன் பேச்சுவார்தை தேவையில்லை என்கிறார் மகிந்த
தென்னிலங்கை அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை யொன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைத்திரிக்கும் தனக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தை எதுவும் தேவையில்லையென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் விசேட பேச்சுவார்த்தை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் மகிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார். எமக்கிடையில் விசேட பேச்சுவார்த்தை தேவையில்லை.
ஏனெனில். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர். நான் அக்கட்சியின் போஷகர். எமக்கிடையில் பாரிய இடைவெளி கிடையாது. அதனால் எமக்குள் விசேட பேச்சுவார்த்தை எதுவும் தேவையில்லை என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.








