ஐ.நா சிறிப்பு நிபுணர் கூட்டமைப்புடன் சந்திப்பு!
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று காலை நடைபெற்றுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ க்ரீப் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளார்.
அவர்களுக்கு இடையில் மூடுநிலை பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
ஆறுநாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக பப்லோ டி க்ரீப் இலங்கை வந்துள்ளார். அவர் அரசாங்க மற்றும் எதிர்கட்சிகளின் பல்வேறு தரப்பினரை சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.








