Breaking News

நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் என்று எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துள குணவர்தன  தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றகட்டிடத் தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நிதி அமைச்சர் என்ற வகையில் பொறுப்பற்ற விதமாக அமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்து வெளியிட்டிருப்பதாக குற்றம் சுமத்தினார். 

இலங்கையில்மத்திய வங்கியினால் முன்னர் விடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், இலங்கையின் உண்மையான கடன் தொகை இதுவல்லவென்றும் ரவி கருணாநாயக்கநாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். 

இவ்வாறான கருத்தினால் வெளிநாடுகள் இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்காத நிலை ஏற்படும். எனவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என்று பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார்.