Breaking News

ரணிலின் கனவு பலிக்காது! சம்பிக்க

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கனவு பலிக்காது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை ஏமாற்றுவதனை போன்று மக்களை ஏமாற்ற இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் புதிய அரசியல் சாசனத் திருத்தங்களை சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச சட்டத் திருத்தத்திற்கு முரணான வகையில் புதிய திருத்தங்களுடன் பாராளுமன்றில் 19ம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரங்களுடன் கூடிய பிரதமர் ஆட்சி முறைமை ஒன்றை உருவாக்கவே முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1995ம் ஆண்டில் கட்சியின் யாப்பினை ரணில் விக்ரமசிங்க மாற்றியதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியில் எவ்வித ஜனநாயகமும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியை ஏமாற்றுவதனை போன்று அவரால் மக்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது என சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.