விஜய்யின் படத்தில் தேசிய விருது பாடகி உத்ரா
‘அழகே அழகு’ என்ற பாடலை பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருந்தார்.
இந்த பாடலை பாடியதற்காக உத்ரா தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். இந்நிலையில் உத்ரா, நடிகர் விஜய் நடிக்க இருக்கும் 59-வது படத்தில் ஒரு பாடல் பாடுகிறாராம்.
இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைக்கிறார். அட்லி இயக்க இருக்கிறார். இதுகுறித்து உத்ரா கூறும்போது ‘‘நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் துள்ளலான பாடலை பாடுகிறேன்’’ என்றார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.








