மஹிந்தவை விமர்சிக்கும் சந்திரிக்கா மீது தயான் ஜயதிலக பாய்ச்சல்!
எவ்வித மக்கள் பலமும் அற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வடக்கில் காணி வழங்கும் அரச நிகழ்விற்கும் மேலும் சில முக்கிய நிகழ்விற்கும் பகிரங்கமாக பிரசன்னமாவது எப்படி என பிரபல அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக கேள்வி எழுப்பியுள்ளார்.
சந்திரிக்கா தேசிய நல்லிணக்க ஜனாதிபதி செயலணியிலும் தேசிய ஐக்கிய உயர் அலுவலகத்திலும் பிரதானியாக உள்ளதுடன் தேசிய நிறைவேற்று சபையிலும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்திரிக்காவிற்கு அவ்வாறு செயற்பட முடியும் என யாப்பில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என தயான் ஜயதிலக தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதாக சந்திரிக்கா பலவாறு கருத்துக்களை முன்வைப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியின் கருப்பைக்குள் அனுப்பியது மஹிந்த ராஜபக்ஷ அல்ல என்றும் தயான் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி பிரதமரின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை சேவையாளர்களாக மாற்றியது மஹிந்த ராஜபக்ஷ அல்ல என்று தயான் ஜயதிலக தெரிவித்தார்.








