Breaking News

உள்நாட்டு விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிடவில்லை - ஜனாதிபதி

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “சில மேற்கு நாடுகள், பிரதமர் வேட்பாளர் தொடர்பாக  இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக, ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை. இது இலங்கையில் உள்ள ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.