நிலநடுக்கத்தில் 1800 பேர் வரை பலி
நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 1800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது.
இதன் பாதிப்பு இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை உதவிக் குழுவை ஏற்றிக் கொண்டு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானம் இன்று காலை காத்மண்டு நோக்கி புறப்பட்டுள்ளது. இதில் நான்கு வைத்தியர்கள் மற்றும் 46 மீட்புப் படையினரும் உள்ளடங்கியுள்ளனர்.








