மயூரனின் மேன் முறையீடு நிராகரிப்பு!
இந்தோனேஷியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை வம்சாவளி அவுஸ்ரேலிய தமிழரான மயூரன் சுகுமாரனின் மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய உச்ச நீதிமன்றம் நேற்று அந்த மனுவை நிராகரித்தது. போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோருக்கு இந்தோனேஷியா மரண தண்டனை விதித்தது.
இந்தநிலையில், இவர்களை காப்பாற்ற அவுஸ்ரேலியா அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. அத்துடன், இந்தோனேசிய ஜனாதிபதி, தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுத்ததை அடுத்தே, இவ்வாறு மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இவர்களுக்கான மரன தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் இந்தோனேஷிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








